Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையை திணறடித்த அஸ்வின்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி!

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2017 (13:26 IST)
இலங்கை - இந்தியா அணிகள் இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய் அணி இன்னிங்ஸ் வெற்றிப்பெற்றது.


 
இலங்கை - இந்தியா அணிகள் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் நாளிலே 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி போட்டியின் மூன்றாவது நாளான நேற்று 6 விக்கெட் இழப்பிற்கு 610 ரன்கள் குவித்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
 
முரளி விஜய், புஜாரா, ரோகித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். இதனால் இந்திய அணி 405 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்தது.
 
நான்காவது நாளான இன்று இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தது. இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் மட்டும் ஒருபக்கம் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். தினேஷ் சந்திமால் 61 ரன்கள் குவிந்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
 
இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிப்பெற்றது. இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியபோது டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே நிலை தற்போது மீண்டும் திரும்பியுள்ளது. 
 
அஸ்வின் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றினார். முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தார். ஜடேஜா மற்றும் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகள் கைப்பற்றினர். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.  

தொடர்புடைய செய்திகள்

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments