Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ரன்களில் 3 விக்கெட்டுக்கள்.. இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்த நியூசிலாந்து..!

Mahendran
வியாழன், 17 அக்டோபர் 2024 (10:13 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பெங்களூர் நகரில் நேற்று தொடங்க இருந்த நிலையில், மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஆட்டம் தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனால், அது எவ்வளவு பெரிய தவறு என்பது அதன் பின்னரே தான் தெரிந்தது.

தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 8 ரன்னிலும், ரோஹித் சர்மா 2 ரன்னிலும் அவுட் ஆன நிலையில், விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இதனை அடுத்து, இந்திய அணி வெறும் 10 ரன்னில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கிறது.

நியூசிலாந்து அணியின் டிம் சவுதி, ஹென்றி, மற்றும் வில்லியம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். தற்போது, ரிஷப் பண்ட் மற்றும் சர்பராஸ் கான் ஆகிய இருவரும் பேட்டிங் செய்து வருகின்றனர் என்பதும், இருவரும் இன்னும் ஒரு ரன்னும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

க்ளாஸை உடைச்சு பில்டப் பண்ணி வந்தது இதுக்குதானா? டக் அவுட் மூலம் ஹிட்மேன் செய்த புதிய சாதனை!

‘யாருப்பா நீ.. நல்லா பவுலிங் போட்ட’… தோனியே அழைத்துப் பாராட்டிய விக்னேஷ் புத்தூர்!

கண்ணா நீ அவுட்டு கெளம்பு! தோனியின் மின்னல் வேகம்! அதிர்ச்சியில் உறைந்த சூர்யகுமார் - வைரல் வீடியோ!

போடா அங்குட்டு.. மும்பை ப்ளேயரை பேட்டால் அடித்து விரட்டிய தோனி! - வைரலாகும் வீடியோ!

சிஎஸ்கே அடுத்த வெற்றியை பார்க்க வேண்டுமா? CSK - RCB போட்டிக்கான டிக்கெட் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments