Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைந்த டிவில்லியர்ஸ்… பாராட்டித் தள்ளிய விராட் கோலி!

Advertiesment
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைந்த டிவில்லியர்ஸ்… பாராட்டித் தள்ளிய விராட் கோலி!

vinoth

, வியாழன், 17 அக்டோபர் 2024 (07:50 IST)
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ் நாடு தாண்டியும் உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். அதற்குக் காரணம் அவரின் அபரிவிதமான ஷாட்களும் அதிரடியான ஆட்டமும்தான். ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக டி வில்லியர்ஸ் விளையாடினார். அவர் தலைமையில் தென்னாப்பிரிக்க அணி உலகக் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை.

அதன் பின்னர் தன்னுடைய ஏற்பட்ட பார்வை குறைபாடு காரணமாக வெகு விரைவாகவே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் தன்னுடைய சமூகவலைதள சேனல் மூலமாக  கிரிக்கெட் குறித்து தொடர்ந்து தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அவருடைய பங்களிப்பைப் பாராட்டி அவரது பெயர் “ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்” பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அது குறித்து கோலி “நான் இணைந்து விளையாடிய வீரர்களில் திறமையானவர்களில் ஒருவர்.” என தனது சகவீரரைப் பாராட்டியுள்ளார். டிவில்லியர்ஸுடன் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் மற்றும் இந்தியாவின் நீத்து டேவிட் ஆகியோரும் ஹால் ஆஃப் ஃபேமில் இணைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டு செஷன்கள் மழையால் பாதிப்பு… பெங்களூர் டெஸ்ட்டில் டாஸ் எப்போது?