Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகமதாபாத் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா..!

Webdunia
சனி, 11 மார்ச் 2023 (12:07 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே தற்போது அகமதாபாத் மைதானத்தில் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 480 ரன்கள் எடுத்தன என்பதும் அந்த அணியின் உஸ்மான் காவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகிய இருவரும் அதிரடியாக சதம் அடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் தற்போது விளையாடி வரும் நிலையில் ரோகித் சர்மா 35 ரன்கள் எடுத்து அவுட்டான போதிலும் சுப்மன் கில் மற்றும் புஜாரா ஆகியோர் பொறுமையாக விளையாடி வருகின்றனர். சுப்மன் கில் 65 ரன்கள் எடுத்துள்ளார். 
 
இந்த நிலையில் இந்தியா இதுவரை 37 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 351 இந்தியா பின்தங்கி இருந்தாலும் ஒன்பது விக்கெட் கைகள் இருப்பதால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை நெருங்கிவிடும் அல்லது தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் லீக் தொடர் மீண்டும் தொடங்குவது எப்போது?..ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை!

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

அடுத்த கட்டுரையில்
Show comments