இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வரும் நிலையில், இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 185 ரன்கள் ஆல் அவுட் ஆனது.
அதன் பின், நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் கடைசி பந்தில் ஒரு விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி, தற்போது 6 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து பேட்டிங் செய்ய திணறி வருகிறது. இன்னும் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 36 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியை இந்தியா வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்பதால், இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடி போட்டியை வெல்ல முழு முயற்சி எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியை வென்று தொடரையும் சமன் செய்வார்களா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.