Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரோஹித்தை நீக்கியுள்ளார்கள்.. அதை ஏன் வெளியில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.. கிண்டல் செய்த ஆஸி வீரர்!

Advertiesment
விராட் கோலி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் பும்ரா முதலில் பேட் செய்யும் முடிவை எடுத்தார்.

அதையடுத்து பேட் ஆடவந்த இந்திய அணி உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்களை இழந்து 57  ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது. விராட் கோலி களத்தில் உள்ளார். இந்த போட்டியில் எதிர்பார்க்கப்பட்டது போலவே ரோஹித்ஷர்மா இடம்பெறவில்லை. அவரின் மோசமான ஆட்டத்திறனே அதற்குக் காரணம்.

இந்நிலையில் ஆஸி அணியின் முன்னாள் வீரர் மார்க் டெய்லர் பேசும்போது “ரோஹித் ஷர்மா அணியில் இருந்து விலகவில்லை. அவர் நீக்கப்பட்டுள்ளார். ஏனென்றால் ஒரு தொடரின் இறுதிப் போட்டியில் அதுவும் முக்கியமான போட்டியில் கேப்டன் விலகமாட்டார். ஆனால் அவரை நீக்கியதை ஏன் இவர்கள் பேசமாட்டேன் என்கிறார்கள் என்று தெரியவில்லை.  அவர் ஒட்டுமொத்தமாக அணியில் இருந்து விலக்கப்படவில்லை. இந்த போட்டியில் இருந்து மட்டும்தான் நீக்கப்பட்டுள்ளார்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5வது டெஸ்ட் போட்டியிலும் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. 8 விக்கெட்டுக்கள் காலி