5வது டி20.. இந்தியா மின்னல்வேக பேட்டிங்.. ஆனால் மின்னல் காரணமாக ஆட்டம் நிறுத்தம்..!

Siva
சனி, 8 நவம்பர் 2025 (14:37 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது.
 
தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 23 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் ஆறு பவுண்டரிகள் அடித்து 29 ரன்கள் எடுத்த நிலையில், திடீரென இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 
 
தற்போது வரை இந்திய அணி 4.5 ஓவர்களில் 52 ரன்கள் எடுத்துள்ளது என்பதும், விக்கெட் எதுவும் இழக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மழை நின்றவுடன் மீண்டும் ஆட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஏற்கனவே இந்த தொடரில் இரண்டு போட்டிகளை இந்தியா வென்று விட்டது. இந்த போட்டியையும் வென்றால் தொடரை வென்று விடலாம் என்பதும், அதே நேரத்தில் ஆஸ்திரேலியா வென்றால் தொடர் சமமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னுடைய மாதவிடாய் தேதியை தேர்வாளர் கேட்டார்.. கிரிக்கெட் வீராங்கனை பகீர் புகார்..

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் வீராங்கனைக்கு ரூ.2.5 கோடி.. அரசு வேலையும் உண்டு..!

4வது டி20 போட்டி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.. 2-1 என முன்னிலை..!

உலகக்கோப்பையை வென்ற வீராங்கனைகள் அனைவருக்கும் அசத்தல் பரிசு.. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

இந்த வருஷமும் definitely not தான்… தோனி குறித்து அப்டேட் கொடுத்த காசி விஸ்வநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments