இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 549 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்தியா, 22 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்புக்கு சென்று கொண்டிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 489 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 260 ரன்களும் எடுத்திருந்தபோது டிக்ளர் செய்தது. இந்தியா தனது முதல் இன்னிங்சில் 201 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 549 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது விளையாடி வருகிறது.
இந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகிய இருவருமே மிக சொற்ப ரன்களுக்கு அவுட் ஆகிவிட்டனர். தற்போது சாய் சுதர்சன் மற்றும் குல்திப் யாதவ் களத்தில் உள்ளனர்.
527 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் இந்தியா இரண்டு விக்கெட்டுகளை இழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.