பாரிஸில் தொடங்கி நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் முதல் நாளான இன்று இந்தியா வெண்கல பதக்கத்துடன் தனது பதக்க வேட்டையைத் தொடங்கியுள்ளது.
ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பாரிஸில் தொடங்கி நடந்து வரும் நிலையில் இன்று பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர். முதல் நாளான இன்று ஆஸ்திரேலியா 3 தங்கம் 2 வெள்ளி வென்று முதல் இடத்தில் உள்ளது. சீனா 4 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது.
இன்று நடந்த பெண்கள் பேட்மிண்டன் க்ரூப் எம் பிரிவில் விளையாடிய பிவி சிந்து 21-9, 21-6 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கல பதக்கத்தை வென்று இந்தியாவின் வெற்றி கணக்கை தொடங்கி வைத்துள்ளார்.
10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் முதன்முதலில் வெண்கலம் வெல்லும் இந்திய வீராங்கனையும், முதல் போட்டியிலேயே வெண்கலம் வென்ற முதல் வீராங்கனையாகவும் மனு பாக்கர் சாதனை படைத்துள்ளார். தற்போது 1 வெண்க்ல பதக்கத்துடன் இந்தியா 17வது இடத்தில் இருந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் பதக்க வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K