வீரர்கள் தேர்வை தள்ளிபோட்ட பிசிசிஐ: தோனி முடிவுக்காக வெயிட்டிங்?

வெள்ளி, 19 ஜூலை 2019 (08:40 IST)
மேற்கு இந்திய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் தேர்வை பிசிசிஐ திடிரென ஒத்திவைத்துள்ளது.
 
சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் தோற்றது. இதனால் அரையிறுதியோடு இந்த அணி உலகக்கோப்பை போட்டிடில் இருந்து வெளியேறியது. 
 
இந்த தோல்வியின் மூலம் தோனி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். அதோடு அவர் தனது ஓய்வை அறிவிக்கவுள்ளார் என பல செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால், தோனி வழக்கம் போல் எந்த விமர்சனங்களையும் கண்டுக்கொள்ளாமல் உள்ளார். 
இந்நிலையில், அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் டூர் செல்லும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என அறிவிகப்பட்டிருந்த நிலையில் தோனி இந்த தொடரில் இருப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
 
ஆனால், மேற்கு இந்திய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் தேர்வை பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது. நாளை மறுநாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிடும் என தகவல். 
மும்பையில் இன்று நடைபெறவிருந்த நிலையில் இந்திய அணி தேர்வை பிசிசிஐ ஒத்திவைத்துள்ளதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இருப்பினும் தோனி குறித்து முடிவெடுக்க அல்ல தோனியின் முடிவுக்காக பிசிசிஐ தேர்வை ஒத்திவைத்துள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மே.இ.தீவுகள் தொடர்: இந்திய அணி வீரர்களின் தேர்வு திடீர் ஒத்திவைப்பு