Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெஸ்ட் இண்டீஸ் தொடர் ! ’தல தோனி தலை’ நிமிர்வாரா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Advertiesment
வெஸ்ட் இண்டீஸ் தொடர் ! ’தல தோனி தலை’ நிமிர்வாரா ?  ரசிகர்கள் எதிர்பார்ப்பு
, வியாழன், 18 ஜூலை 2019 (20:56 IST)
நம் இந்திய கிரிகெட் அணியில் மகத்தான வீரராகவும், தலைசிறந்த வீரராக பேட்ஸ்மேனாக மற்றும் விக்கெட் கீப்பராக அறியப்பட்டவர் தல தோனி. களத்தில் இவர் எல்லாவிதமாக சூழ்நிலைகளையும் அமைதியாக சமாளிக்கும் திறமையைப் பார்த்து மக்கள் இவரை கூல் கேப்டன் என்று அழைக்கின்றனர்.
சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் தோற்றது. இதனால் ரசிகர்கள் கவலையுற்றனர்.
 
இந்த அரையிறுதி ஆட்டத்தில் தோனியை நம்பி இருந்த ஒட்டுமொத்த அணியும்,( தோனி உள்பட) தோனி அவுட் ஆனதால் ஆட்டத்தில் திசைப்போக்கே மாறியது.
 
இப்போட்டியில் தோனி ரன் எடுக்க ஓட முடியாததே காரணம் என்றும், அவருக்கு வயதாகி விட்டதாகவும், ஓய்வு எடுப்பது பற்றி யோசிக்கலாம் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகிறது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் வழக்கம் போல கூலாக உள்ளார் தோனி. ஆனால் ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர்.
 
இந்நிலையில் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் டூர் செல்லும் இந்திய அணி, ஆகஸ்ட் 3லிருந்து, 14 வரையிலான ஒருநாள்,டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் நம்ம தல தோனி இருக்கிறராரா இல்லையா என்பதும் தோனி ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இந்நிலையில் நாளை வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்யவுள்ள இந்திய அணியினர் பற்றிய விவரங்களை பிசிசிஐ வெளியிடும் என்று தெரிகிறது. இதில் அவர் தேர்வானால் நிச்சயம் தன் பழைய பார்முக்கு அவர் திரும்ப வேண்டியது கட்டாயம் என்று பலரும் கருத்து கூறுகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓய்வுதான் சரியான முடிவு: பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா தோனி?