இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருப்பதால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆறாம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் தொடங்கிய நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனை அடுத்து, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 337 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், முதல் இன்னிங்ஸ் போலவே இரண்டாவது இன்னிங்சிலும், முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், இந்திய அணி 175 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால், இந்தியா வெறும் 18 ரன்கள் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இன்னும் சில நிமிடங்களில் ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்க இருக்கும் நிலையில், வெற்றி வாய்ப்புகளை பெரிதும் அதிகரித்துள்ளது.
18 ரன்களை சில ஓவர்களில் ஆஸ்திரேலியா எடுத்து விடும் என்பதால், இந்திய அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva