Publish Date: Sat, 07 Dec 2024 (13:18 IST)
Updated Date: Sat, 07 Dec 2024 (13:20 IST)
டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த தற்கால தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுபவர் ஜோ ரூட். சமீபத்தில் அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் டெஸ்ட் போட்டிகளில் 12000 ரன்கள் என்ற மைல்கல் சாதனையை எட்டினார்.
தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களில் அதிக டெஸ்ட் ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையை அவர் தன் கைவசம் வைத்துள்ளார். அவருக்கு ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் விராட் கோலி ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஜோ ரூட் நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அவர் ஒரு முக்கியமான சாதனையைப் படைத்துள்ளார். இந்த இன்னிங்ஸில் அவர் அடித்த அரைசதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் 100 ஆவது 50+ ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னர் இந்த சாதனையை நிகழ்த்திய வீரர்களாக சச்சின், ஜாக் காலிஸ் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.