முதல் முறையாக ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் வென்றதால் இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் சரித்திர சாதனையை பதிவு செய்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய காலத்தில் இரு அணிகளும் மோதின.
முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனை தொடர்ந்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.
தொடக்க ஆட்டக்காரர்களான, ரோஹித் சர்மா மற்றும் தவான் 23 என சொதப்ப அதன்பின் விராட் கோலியுடன் கைகோர்த்த தோனி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
விராட் 43 ரன்கள் எடுத்தபோது அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின்னர் தோனியுடன் சேர்ந்து கெதர் ஜாதவ் நிதானமாக ஆடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு எடுத்து சென்றனர்.
இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு, 234 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தோனி 87 ரன்களுடனும், கெதர் ஜாதவ் 61 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
இதன் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை படைத்துள்ளது. அதோடு, தோனி ஆடிய மூன்று ஆட்டங்களில் அரைசதங்களை கடந்து ஹேட்ரிக் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மேன் ஆப் தி சிரீஸையும் தட்டி சென்றுள்ளார்.