கடந்த சில நாட்களாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கத்தை குவித்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம்
ஏற்கனவே இந்தியாவுக்கு 3 வெண்கல பதக்கங்கள் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளதை அடுத்து மொத்தம் 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இன்னும் ஒரு சில பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்த வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஈட்டி எறிதல் போட்டியில் நாளை நீரஜ்சோப்ரா விளையாட உள்ளார். இந்த இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் கண்டிப்பாக பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதேபோல் மல்யுத்த போட்டியில் வெண்கலப் அதற்கான போட்டியில் பஜ்ரங் புனியா என்பவர் களமிறங்க உள்ளார். இவரும் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது எனவே இந்தியாவின் பதக்க பட்டியல் உயருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்