ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 71வது பதக்கத்தை வென்று இந்தியா புதிய சாதனை செய்துள்ளது.
இன்று நடந்த வில்வித்தை கலப்பு காம்பவுண்ட் பிரிவில் இந்தியா தங்கம் வென்று சாதனை செய்துள்ளது.
கடந்த 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 70 பதக்கங்கள் வென்ற நிலையில், தற்போது 71 பதக்கங்களை வென்று புதிய சாதனையை இந்தியா செய்துள்ளது
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இந்தியா 16 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என 71 பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.