ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று நேபாளத்தை எதிர்கொண்ட இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
சீனாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் படகு போட்டி, துப்பாக்கி சுடுதல் என பல பிரிவுகளிலும் ஏராளமான இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக கொண்ட இந்திய அணி விளையாடி வருகிறது. இன்று நேபாளத்துடன் நடந்த கால் இறுதி டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 202 ரன்களை குவித்தது. அடுத்ததாக களம் இறங்கிய நேபாள அணியை 20 ஓவர்களில் 9 விக்கெட்டை வீழ்த்தி 179 ரன்களுக்குள் சுருட்டி 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றியை கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது முதல் டி20 சர்வதேச சதத்தை தொடங்கி அசத்தியுள்ளார்.