Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் ஒருநாள் போட்டி.. சுப்மன் கில் அபார பேட்டிங்.. வெற்றியுடன் தொடங்கிய இந்தியா..!

Siva
வெள்ளி, 7 பிப்ரவரி 2025 (07:29 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் அபார பேட்டிங் காரணமாக இந்தியா வெற்றியுடன் தொடரை தொடங்கியுள்ளது.
 
நேற்றைய போட்டியில், இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 47 ஓவர்களில் 248 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜாஸ் பட்லர் 51 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய தரப்பில், ஜடேஜா மற்றும் ரானா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 
இதனை அடுத்து, 249 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 15 ரன்களிலும் அவுட் ஆனாலும், சுப்மன் கில் அபாரமாக விளையாடி 87 ரன்கள் அடித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 59 ரன்களும், அக்சர் பட்டேல் 52 ரன்களும் எடுத்த நிலையில், இந்திய அணி 38 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது.
 
இந்த போட்டியில், சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக் மைதானத்தில் வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெய்ஸ்வால் உள்ளே… கோலி வெளியே – இந்திய அணியில் நடந்த அதிரடி மாற்றம்!

திடீரென ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய அணி வீரர்!

சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் ஒரு இந்திய நடுவர் கூட இல்லை… வெளியான பட்டியல்!

இந்தியா vs இங்கிலாந்து… இன்று தொடங்குகிறது முதல் ஒருநாள் போட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments