Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஸ்வின் - பும்ரா அசத்தல் பவுலிங்: இந்தியா அபார வெற்றி!

Advertiesment
அஸ்வின் - பும்ரா அசத்தல் பவுலிங்: இந்தியா அபார வெற்றி!
, திங்கள், 14 மார்ச் 2022 (19:55 IST)
இந்தியா மற்றும் இலங்கை இடையே நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் அசத்தல் பந்துவீச்சு காரணமாக 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது
 
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூரில் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 252 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்தன 
 
இதனையடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்சில் 109 ரன்கள் மட்டுமே எடுத்தது அடுத்து அந்த அணிக்கு 447 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அந்த அணி 208 ரன்களில் ஆல்-அவுட் ஆனதால் 238 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் மற்றும் பும்ரா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சூப்பராக பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்ட நாயகன் விருதும், தொடர் நாயகனாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார்கள்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ரேயாஸ் ஐயரின் உச்ச பார்ம்… ஐசிசி அளித்த கௌரவம்!