காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: இந்தியாவுக்கு இரண்டாவது வெற்றி!

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (08:05 IST)
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: இந்தியாவுக்கு இரண்டாவது வெற்றி!
இங்கிலாந்து நாட்டில் காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று இந்திய அணி பார்படாஸ் அணியுடன் மோதியது.
 
இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 162 ரன்கள் அடித்தது. கேப்டன் கெளர் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தாலும், ஜெமியா 56 ரன்களும், ஸ்மிருதி வெர்மா 43 ரன்கள் எடுத்தனர்.
 
இந்த நிலையில் 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பார்படாஸ் அணி, இந்திய வீராங்கனைகளின் பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து இந்திய மகளிர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஏ பிரிவில் இந்திய அணி தற்போது இரண்டு வெற்றிகளுடன் நான்கு புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதும் ஆஸ்திரேலிய அணி 3 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments