Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் கிரிக்கெட்: பாகிஸ்தான் மகளிர் அணி படுதோல்வி

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (19:42 IST)
கடந்த சில நாட்களாக காமன்வெல்த் போட்டி நடைபெற்று வரும் நிலையில் அதில் மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏ மற்றும் பி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன இந்த நிலையில் இன்று ஏ பிரிவில் இடம் பெற்ற பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பாகிஸ்தான் மகளிரணி 161 என்ற இலக்கை நோக்கி விளையாடியபோது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து அந்த அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது 
 
இந்த நிலையில் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா அணி 6 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் புள்ளிகள் ஏதுமின்றி கடைசி இடத்தில் உள்ளது.  இந்தியா இரண்டு புள்ளிகள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments