கடந்த சில நாட்களாக காமன்வெல்த் போட்டி நடைபெற்று வரும் நிலையில் அதில் மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
ஏ மற்றும் பி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன இந்த நிலையில் இன்று ஏ பிரிவில் இடம் பெற்ற பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பாகிஸ்தான் மகளிரணி 161 என்ற இலக்கை நோக்கி விளையாடியபோது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து அந்த அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது
இந்த நிலையில் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா அணி 6 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் புள்ளிகள் ஏதுமின்றி கடைசி இடத்தில் உள்ளது. இந்தியா இரண்டு புள்ளிகள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது