Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3வது நடுவரின் முடிவை விமர்சித்த சுப்மன் கில்: 115% அபராதம் விதித்த ஐசிசி..!

Advertiesment
subman gill
, திங்கள், 12 ஜூன் 2023 (13:42 IST)
மூன்றாவது நபரின் முடிவை தனது சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்த சுப்மன் கில் மீது ஐசிசி  நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சுப்மன் கில் கேட்ச் கொடுக்கப்பட்டு அவுட் ஆனார். இந்த கேட்ச் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதும் சமூக வலைதளங்களில் பலர் இது அவுட் இல்லை என்றும் கூறி வருகின்றனர். 
 
இந்த நிலையில் மூன்றாவது நடுவரின் முடிவை விமர்சிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட சுப்மன் கில்லுக்கு போட்டிக்கான ஊதியத்தில் 15% ஐசிசி அபராதம் விதித்துள்ளது. 
 
ஏற்கனவே மெதுவாக பந்து வீசியதற்காக போட்டிக்கான முழு ஊதியமும் இந்திய அணிக்கு அபராதமாக விதிக்கப்பட்ட நிலையில் சுப்மன் கில்லுக்கு 115 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிக்கு ஐசிசி அபராதம்..!