இந்திய அணிக்கு கோலி நீண்டகாலமாக மிகப்பெரிய சொத்தாக விளங்கி வருகிறார். சமீபத்தில் பிசிசிஐ அவரிடம் இருந்து ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியை பறித்தது. அதன்பின்னர் அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.
இது குறித்து அப்போதே கோலிக்கு ஆதரவாகவும், பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோருக்கு எதிராகவும் ரசிகர்கள் கருத்து தெர்வித்தனர். இந்நிலையில் இப்போது உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடந்து வரும் நிலையில் மீண்டும் கோலி பற்றிய பேச்சுகள் எழுந்துள்ளன.
நேற்றைய முதல்நாளில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா எந்த திட்டமும் வந்தது போல காணப்பட்டார். அவரின் வியூகங்கள் எதற்குமே பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆஸி அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஜஸ்டின் லாங்கர் கோலி & பிசிசிஐ பற்றி பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில் “கோலியின் ஆக்ரோஷம் எனக்கு மிகவும் பிடிக்கும். கேப்டன்சி விஷயத்தில் கோலிக்கு பிசிசிஐ அநீதி இழைத்துவிட்டது என்பதுதான் உண்மை. அவர் கேப்டன்சியை பறித்துவிட்டதாகவே உணர்கிறேன்.” என பேசியுள்ளது இணையத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.