Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 15 March 2025
webdunia

இந்தியா-ஆஸ்திரேலியா தூதராகிறார் பிரபல கிரிக்கெட் வீரர்!

Advertiesment
இந்தியா-ஆஸ்திரேலியா தூதராகிறார் பிரபல கிரிக்கெட் வீரர்!
, செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (19:45 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தங்களில் தூதுவராக பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 
 
ஆஸ்திரேலிய நாட்டின் தொடக்க வீரராக பல ஆண்டுகளாக விளையாடியவர் மேத்யூ ஹைடன். இவர் 103 டெஸ்ட் போட்டிகளிலும் 161 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி 40 சதங்களை அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா கவுன்சில் தலைவராக அசோக் ஜேக்கப் என்பவரும் துணைத்தலைவராக விசாசிங் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் முக்கிய பதவியில் மேத்யூ ஹைடன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பதவி குறித்து மேத்யூ ஹைடன் கூறியபோது ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை இந்தியாவுடன் இணைந்து முன்னேற்றுவேன் என்றும் இந்த கவுன்சில் தனக்கு நல்ல வாய்ப்பை வழங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தங்களில் தூதுவராக மேத்யூ ஹைடன் நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுரேஷ் ரெய்னா விலகல்….சி எஸ் கே அணிக்கு பலம் கூட்டிய இரு வீரர்கள்!