Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்காளி பல்தான்ஸ் வந்துட்டா பட்டைய கிளப்பலாம்! – LSG vs MI வெல்ல போவது யார்?

Rohit sharma
, புதன், 24 மே 2023 (09:42 IST)
இன்று நடைபெற உள்ள எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோத உள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் முடிந்து குவாலிஃபயர், எலிமினேட்டர் போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. நேற்றைய போட்டியின் வெற்றியின் மூலம் சிஎஸ்கே இறுதி சுற்று சென்றுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற உள்ள மும்பை இந்தியன்ஸ் – லக்னோ அணி போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எப்படி சென்னை அணி குஜராத்தை வென்றதே இல்லை என நேற்று வரை ஒரு வரலாறு இருந்ததோ அதேபோல மும்பை அணியும் இதுவரை லக்னோ அணியை வென்றதே இல்லை என்பதே ஐபிஎல் வரலாறு. வரலாற்றை முறியடித்து இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெல்ல வேண்டும் என்பது மும்பை ரசிகர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, சிஎஸ்கே ரசிகர்களின் எதிர்பார்ப்பும் கூட அந்த வகையிலேயே உள்ளது.

லக்னோ அணி அளவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணியும் பேட்டிங்கில் நல்ல வலுவில் உள்ளது. ஆனால் மும்பை அணியின் பந்து வீச்சு அவ்வளவு சாதகமானதாக இல்லை. பும்ரா போன்ற ஸ்டார் பந்து வீச்சாளர்கள் இல்லாத குறை ஒவ்வொரு போட்டியிலுமே வெளிப்படுகிறது. ஆனாலும் சில போட்டிகளில் மத்வால், பியூஷ் சாவ்லா போன்றோர் விக்கெட்டுகளை வீழ்த்தி கலக்கியுள்ளனர். இன்று நடைபெறும் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ய முடிந்தால் அணிக்கு சேஸிங் எளிதானதாக அமையும் என்பது கிரிக்கெட் வல்லுனர்கள் கணிப்பு. மேலும் இறுதிப் போட்டியில் சிஎஸ்கேவுக்கு பங்காளி அணியான மும்பை இந்தியன்ஸ் நுழைந்தால் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் என்ற El Classico போட்டி ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பதிரனா பந்து வீச அனுமதி மறுத்த நடுவர்கள்… தோனி வாக்குவாதம் – நடந்தது என்ன?