Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் கோப்பை போனால் என்ன, ஹாக்கி கோப்பையை வென்றது இந்திய மகளிர் அணி..!

Webdunia
ஞாயிறு, 11 ஜூன் 2023 (18:04 IST)
ஒரு பக்கம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் கோப்பையை இந்தியா இழந்தாலும் இன்னொரு பக்கம் மகளிர் ஜூனியர் ஹாக்கி கோப்பையை முதன் முறையாக வென்று  இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. 
 
ஜப்பானில் நடைபெற்று வரும் மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டியில் தகுதி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் தென்கொரிய அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இந்தியா சாம்பியன் பட்டத்தை பெற்றது.
 
இந்திய அணிக்காக 22 ஆவது நிமிடத்தில் அன்னு என்பவரும் 49வது நிமிடத்தில் நீலம் என்பவரும் கோல் அடித்து கோப்பையை வெல்ல காரணமாக இருந்தனர். இதற்கு முன் இதே தொடரில் இந்திய அணி 4 வெண்கல பதக்கத்தையும் ஒரு வெள்ளி பதக்கத்தையும் பெற்றிருக்கும் நிலையில் தற்போது முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சமீபத்தில் ஆண்கள் ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்று இருந்த நிலையில் தற்போது மகளிர் அணியும் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments