2023ம் ஆண்டிற்கான ஆசியக்கோப்பை போட்டிகள் நடத்துவது குறித்து தொடர்ந்து பிரச்சினை எழுந்து வந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் புதிய முடிவை எடுத்துள்ளது.
2023ம் ஆண்டிற்கான ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளும் போட்டியிடுகின்றன. இந்த போட்டிகளை முழுவதுமாக பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் பாகிஸ்தான் சென்று விளையாட இந்தியா மறுத்து வந்தது.
இதனால் ஆசியக்கோப்பை தொடரை எந்த நாட்டில் நடத்துவது என்பதில் தொடர்ந்து சர்ச்சை நிலவி வந்தது. இந்நிலையில் ஆசியக் கோப்பை போட்டிகளை பாகிஸ்தான் மற்றும் இலங்கை இரு நாடுகளிலும் நடத்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
அதன்படி மொத்தமுள்ள 13 போட்டிகளில் 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், 9 போட்டிகள் இலங்கையிலும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.