5 விக்கெட் வீழ்த்தி அசத்தும் பாண்டியா; தடுமாறும் இங்கிலாந்து

Webdunia
ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 (20:26 IST)
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது.
 
இந்திய தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 
 
தொடக்க வீரராக களமிறங்கிய குக் 29 ரன்கள் குவித்து வெளியேறினார். அதன்பின் வரிசையாக எல்ல பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தற்போது 128 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 
 
ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இன்றைய ஆட்ட நேர முடிவுக்கு முன்பே இங்கிலாந்து அணி ஆல் அவுட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த முடிவு..!

தனது ராஜா காயை தூக்கி வீசிய நகமுரா! சைலண்டாக பழிதீர்த்த குகேஷ்! - செஸ் போட்டியில் சூப்பர் சம்பவம்!

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து மைதானம்.. சவுதி அரேபியாவின் சாதனை திட்டம்..!

எனக்கு சர்ச்சைப் புதிதல்.. அவர்களுக்கு நன்றி- ஷமி கருத்து!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆச்சு? இப்போது எப்படி இருக்கிறார்? சூர்யகுமார் யாதவ் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments