Publish Date: Sat, 18 Aug 2018 (20:10 IST)
Updated Date: Sat, 18 Aug 2018 (20:13 IST)
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் கோஹ்லியும், ரஹானேவும் மீட்டனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க வீரர்களான தவான் மற்றும் ராகுல் அணிக்கு சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கும் முன்பே வெளியேறினர். புஜாரா 14 ரன்களில் வெளியேறினார்.
அதன்பின்னர் இணைந்த கோஹ்லி, ரஹானே ஜோடி நிலைத்து நின்று ஆடி வருகிறது. கேப்டன் மற்றும் துணை கேப்டன் இருவரும் சேர்ந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் விளாசி அசத்தியுள்ளனர்.