Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் வந்துட்டேன்னு சொல்லு- தமிழில் டுவிட் செய்த சிஎஸ்கே வீரர்

Advertiesment
நான் வந்துட்டேன்னு சொல்லு- தமிழில் டுவிட் செய்த சிஎஸ்கே வீரர்
, வியாழன், 22 மார்ச் 2018 (21:31 IST)
இந்திய அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங் சமிபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரால் ஏலம் எடுக்கப்பட்டார் . ஏலம் எடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே தமிழில் டுவீட் செய்து அசத்திய ஹர்பஜன் இன்று சிஏஸ்கே அறிமுக விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தார்

ஹர்பஜன் சென்னை வந்தவுடன் அவர் செய்த முதல் வேலை தமிழில் ஒரு டுவீட்டை தட்டிவிட்டதுதான். அதில் 'கபாலி' படத்தில் ரஜினி பேசும் வசனமான  நான் வந்துட்டேன்னு சொல்லு' என்று ஆரம்பித்து டுவீட் செய்துள்ளார். அவரது டுவீட் இதுதான்:

நான் வந்துட்டேன்னு சொல்லு

தமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா.

உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, "வீரமா", காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல @ChennaiIPL க்காக விளாட(ச) போறத நெனச்சாலே "மெர்சலாகுது"

தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!!

மேலும் ஹர்பஜன் சிங் பதிவு செய்த இன்னொரு டுவிட்டில் அவர் பெயர் அச்சிடப்பட்ட சென்னை அணியின் ஜெர்சியின் படத்தை பதிவு செய்துள்ளார். அதில் 27 என்ற எண் அச்சிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பகல்-இரவு டெஸ்ட் போட்டி: இங்கிலாந்தை 58 ரன்களுக்கு சுருட்டியது நியூசிலாந்து