சிட்னி டெஸ்ட்டின் கடைசி நாளில் ஆஸியிடம் இருந்து வெற்றிவாய்ப்பை தட்டிபறித்துள்ளது இந்திய அணி.
சிட்னியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 403 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தி வருகிறது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்களை இழந்து 98 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஐந்தாவது நாளில் இந்திய அணி 200 ரன்களைக் கூட சேர்க்காமல் ஆல் அவுட் ஆகிவிடும் எனக் கூறியிருந்தார். இது இந்திய ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து இந்திய அணி ஐந்தாம் நாளான இன்று தனது பேட்டிங்கை தொடர்ந்து ஆடிவந்தது. கேப்டன் ரஹானே 4 ரன்களில் ஆட்டமிழக்க, அதைத் தொடர்ந்து புஜாராவோடு ஜோடி சேர்ந்தார் ரிஷப் பண்ட். புஜாரா நிதானமாக விளையாட பண்ட் அதிரடியில் புகுந்து விளையாடினார். சிறப்பாக விளையாடிய அவர் 97 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதையடுத்து சிறிது நேரத்தில் புஜாராவும் ஆட்டமிழந்தார். தற்போது இந்திய அணி 319 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்து போராடி வருகிறது.
இந்திய அணியின் ஹனுமா விஹாரி மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் நிதானமாக நங்கூரம் பாய்ச்சியது போல நின்று ஆஸி அணியின் பவுலர்களை கடுப்பாக்கியுள்ளனர். விஹாரி 142 பந்துகளில் 15 ரன்களும் அஸ்வின் 116 பந்துகளில் 33 ரன்களும் சேர்த்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி போட்டியை டிரா செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன.