Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேட்டிங்குக்கு சச்சின்… பவுலிங்குக்கு இவர்தான் – மெக்ராத் புகழ்ந்த பவுலர் யார்?

Advertiesment
பேட்டிங்குக்கு சச்சின்… பவுலிங்குக்கு இவர்தான் – மெக்ராத் புகழ்ந்த பவுலர் யார்?
, புதன், 26 ஆகஸ்ட் 2020 (17:29 IST)
டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்களை வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சனை முன்னாள் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை கிளென் மெக்ராத் புகழ்ந்து பேசியுள்ளார்.

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்ப்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் அதிகமான விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். இந்நிலையில் நேற்றைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ஆஜர் அலிகானை தனது 600 ஆவது விக்கெட்டாக வீழ்த்தி சாதனை படைத்தார்.

இதையடுத்து சக கிரிக்கெட் வீரர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் வேகப்பந்து வீச்சில் ஆண்டர்சனுக்கு அடுத்த படியாக அதிக விக்கெட்களை வீழ்த்தியவருமான மெக்ராத் ‘பேட்டிங்கில் எப்படி சச்சின் உச்சங்களை தொட்டாரோ அது போல பவுலிங்கில் ஆண்டர்சன் உச்சங்களை தொட்டுள்ளார். என்னிடம் அவர் போன்ற திறமை இல்லை. அவர் இரு விதமாகவும் ஸ்விங் செய்வதைப் பார்க்கும் போது வியப்பாக உள்ளது’ எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வணக்கம்டி மாப்ள.. அமீரகத்துல இருந்து..! – தமிழில் பேசிய ஹர்பஜன் சிங்!