Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வீரருக்கே இந்த நிலைமையென்றால் மக்களுக்கு – கனேரியா விவகாரத்தில் கம்பீர் கருத்து !

Webdunia
சனி, 28 டிசம்பர் 2019 (08:59 IST)
இந்து என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களால் ஒதுக்கப்பட்ட டேனிஷ் கனேரியா விவகாரத்தில் பாஜக எம்பி கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த டேனிஷ் கனேரியா இந்து என்பதால் சக வீரர்களால் ஒதுக்கப்பட்டார் என சோயிப் அக்தர் தெரிவித்தது பரபரப்பைக் கிளப்பியது. இதை ஆமோதித்த கனேரியா தனக்கு ஆதரவாக இருந்த வீரர்களின் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் எனக் கூறினார். இந்த கருத்து இந்தியாவிலும் அதிர்வுகளை உண்டுபண்ணியது.

இந்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர், ‘முகமது அசாருதீன் கேப்டனாக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். அதுபோல கைஃப், முனாப் படேல், இர்பான் ஆகியோர் விளையாடியுள்ளனர். நாங்கள் அணியாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளோம். ஆனால் கனேரியா சம்மந்தமாக வரும் செய்திகள் நம்பிக்கை அளிக்கவில்லை. புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருக்கே இந்த நிலைமை என்றால் அங்குள்ள இந்து, சீக்கிய மக்களான சிறுபான்மையினரின் நிலை எப்படி இருக்கும்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments