Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கங்குலி தங்கமான மனுசன்! – பாகிஸ்தான் வீரர் புகழாரம்!

Advertiesment
கங்குலி தங்கமான மனுசன்! – பாகிஸ்தான் வீரர் புகழாரம்!
, வியாழன், 26 டிசம்பர் 2019 (10:25 IST)
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சுழல்பந்து வீச்சாளருமான சக்லைன் முஷ்டாக் பிசிசிஐ தலைவர் கங்குலி பற்றி பெருமையாக கூறியுள்ளார்.

சவ்ரவ் கங்குலி இந்திய கிரிக்கெட்டின் கேப்டனாக இருந்தபோது, பாகிஸ்தான் அணியில் சுழல்பந்து வீச்சாளராக இருந்தவர் சக்லைன் முஷ்டாக். அப்போதைய ஆட்டங்களில் சக்லைனுக்கும், கங்குலிக்கும் இடையே பலமுறை வாக்குவாதங்கள் நிகழ்ந்ததுண்டு.

இந்நிலையில் சமீபத்தில் யூட்யூப் வீடியோ வெளியிட்ட சக்லைன், கங்குலி குறித்து பேசியுள்ளார். அதில் “ஒரு முறை இந்தியா அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது நான் சஸ்செக்ஸ் கவுண்டி அணிக்காக விளையாடி கொண்டிருந்தேன். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நீண்ட நாட்கள் விளையாடாமல் இருந்தேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் விளையாடும் ஆட்டமாக அது இருந்தது. பிறகு இந்திய அணிக்கு எதிரான 3 நாள் போட்டிகளில் நான் விளையாடினேன். ஆனால் அதில் கங்குலி விளையாடவில்லை.

அப்போது நான் இருக்கு காத்திருப்பு அறைக்கு காபியுடன் வந்த கங்குலி, என்னிடம் காபியை கொடுத்துவிட்டு என் உடல்நலம் குறித்தும், குடும்பம் குறித்தும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். போட்டியின்போது சச்சரவுகள் இருந்தாலும், மைதானத்தை தாண்டியவுடன் அதை மறந்துவிட்டு இயல்பாக இருப்பவர் கங்குலி” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சச்சினின் பாதுகாப்பு நீக்கம் … முதல்வர் மகனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு – சிவசேனா அதிரடி முடிவு !