Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோஹ்லி கும்ப்ளே மோதலின் போது கங்குலி இருந்திருந்தால் – மனம்திறந்து பேசிய மூத்த அதிகாரி !

Advertiesment
கோஹ்லி கும்ப்ளே மோதலின் போது கங்குலி இருந்திருந்தால் – மனம்திறந்து பேசிய மூத்த அதிகாரி !
, வெள்ளி, 25 அக்டோபர் 2019 (16:13 IST)
இந்திய அணியின் கேப்டனான கோஹ்லிக்கும் பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் இடையில் மோதல் எழுந்த போது கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்திருந்தால் கண்டிப்பாக கும்ப்ளேவைக் கைவிட்டிருக்கமாட்டார்.

இந்திய அணியின் கேப்டனாகக் கோஹ்லி பதவியேற்றபின் பல அளப்பறிய சாதனைகளை செய்துள்ளார். ஆனால் அவருக்கும் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும் இடையில் மோதல் எழுந்து அதற்காக கும்ப்ளே ஓரங்கட்டப்பட்டார் என்பது என்றுமே கோஹ்லியின் மேல் விழுந்த கரும்புள்ளிதான். அதன் பின் ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கோஹ்லியின் தலையாட்டி பொம்மையாக செயலபட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகக் கமிட்டித் தலைவர் வினோத் ராய், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி பற்றி பேசும்போது இப்போது ‘கோலி-கும்ப்ளே பிரச்சினை ஏற்பட்டிருந்தால் கங்குலி நிச்சயமாக கும்ப்ளேவைக் கைவிட்டிருக்கமாட்டார். நான் கும்ப்ளேயை மதிக்கிறேன் காரணம் நான் அவர் பெருந்தன்மையாக விலகினார். ’ எனக் கூறினார்.

மேலும் கோஹ்லிக்கும் ரவி சாஸ்திரிக்கும் கட்டற்ற சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு ‘கோச்சிற்கும் கேப்டனுக்கும் சுதந்திரம் அளிக்காமல் வேறு யாருக்கு அளிப்பது?’எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விராட் கோலிக்கு ஓய்வு: கேப்டன் ஆன ரோகித்!: வங்கதேச தொடர்!