Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுமட்டும் முன்பே இருந்திருந்தால் கும்ப்ளே 900 விக்கெட்களை வீழ்த்தியிருப்பார்! சொன்னது யார் தெரியுமா?

Webdunia
திங்கள், 4 மே 2020 (11:44 IST)
டி ஆர் எஸ் முறை மட்டும் முன்பே இருந்திருந்தால் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் 900 விக்கெட்களை வீழ்த்தியிருப்பார் என கம்பீர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஒருவருக்கு அர்ப்பணிக்க வேண்டுமென்றால் அது அனில் கும்ப்ளேவுக்குதான் எனக் கூறியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் ’டிஆர்எஸ் முறை மட்டும் முன்பே இருந்திருந்தால் அனில் கும்ளே 900 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பார்.அதுபோல் ஹர்பஜன் சிங் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பார்.

கும்ப்ளே அவர் கேப்டனாக இருந்த போது என்னிடமும் சேவாக்கிடமும் எங்களிடம் வந்து பேசினார்.அப்பொழுது என்ன நடந்தாலும் சரி இந்த தொடரில் நீங்கள் இருவரும்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் எனக் கூறினார். இதுபோல யாரும் என்னிடம் சொல்லியதில்லை. என் வாழ்க்கையை ஒருவருக்கு அர்பணிப்பேன் என்றால் அது கும்ப்ளேவிற்கு தான்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

வெற்றியே காணாத ராஜஸ்தான்.. இன்று சிஎஸ்கே ஜெயக்கடவா? பலிக்கடாவா? - CSK vs RR மோதல்!

ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்.. தொடரும் மும்பையின் சோகம்..!

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

அடுத்த கட்டுரையில்
Show comments