ரஷ்யாவில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் அணி கோப்பை கைப்பறியதை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ரஷ்யாவில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் நட்சத்திர வீரர்களை கொண்ட அணிகள் வெளியேறியதும், பெரிது எதிர்பார்க்கப்படாத குரேஷியா நாடு இறுதிப் போட்டிக்கு முன்னெறியதும் நிகழ்ந்தது. பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வென்று அசத்தியது.
பிரான்ஸ் அணியில் பாதிக்கும் மேற்பட்ட வீரர்கள் அந்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் இல்லை. பல முக்கிய வீரர்கள் பிரான்ஸில் குடியேறியவர்கள். பல நாட்டைச் சேர்ந்தவர்களை அணியில் வைத்துக்கொண்டு பிரான்ஸ் என்ற பெயரில் உலகக்கோப்பையை வென்றுள்ளது என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த விமர்சனங்களுக்கு குறித்து கிரைஸ்மேன், நாங்கள் எல்லோரும் ஒரே சீருடை அணிந்து ஒரே அணி விளையாடுகிறோம் என்று தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அணியில் மூன்றில் இரண்டு பங்கு வீரர்கள் குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.