ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நேற்று பிரான்ஸ் மற்றும் குரேஷியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் 4-2 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. வெற்றி பெற்ற பிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடி பரிசு வழங்கப்பட்டது.
நேற்றைய இறுதிப்போட்டி தொடங்கியதில் இருந்தே பிரான்ஸ் அணியின் ஆதிக்கம் தான் அதிகம் இருந்தது. முதல் பாதியில் பிரான்ஸ் அடுத்தடுத்து இரண்டு கோலும் குரேஷியா ஒரு கோலும் போட்டதால் முதல் பாதியின் இறுதியில் 2-1 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் முன்னிலை பெற்றது.
பின்னர் நடந்த இரண்டாம் பாதியில் 59வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் போக்பா அபாரமாக ஒரு கோலையும், பின்னர் 65வது நிமிடத்தில் மப்பே ஒரு கோலையும் போட்டதால் பிரான்ஸ் 4-1 என்ற கணக்கில் வெற்றியை உறுதி செய்தது
இதன்பின்னர் 69வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல்கீப்பரின் கவனக்குறைவால் குரேஷியாவின் மாண்ட்சுகிச் ஒரு கோல் போட்டார். இதனையடுத்து இரு அணிகளும் கோல் போடாததால் 4-2 என்ற கணக்கில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.