Publish Date: Thu, 04 Mar 2021 (07:44 IST)
Updated Date: Thu, 04 Mar 2021 (08:03 IST)
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் இன்று நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. அந்த போட்டி இரண்டே நாட்களில் முடிந்து இந்தியா அபார வெற்றி பெற்றது. இதையடுத்து மைதானத்தின் மீதும் பிசிசிஐ மீதும் விமர்சனங்கள் எழுந்தன. மைதானம் இந்திய சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டது என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் உள்ளிட்டோர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விமர்சனங்களுக்கு இடையில் இன்று நான்காவது டெஸ்ட் போட்டி அதே மைதானத்தில் நடக்க உள்ளது. ஆனால் 3 ஆவது டெஸ்ட்டை போல இல்லாமல் பகல் டெஸ்ட் போட்டியாக வெள்ளை நிறப்பந்தில் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கும் மைதானம் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாகவே அமைக்கப்படும் என சொல்லப்படுகிறது.