ஆசிய கோப்பை கிரிக்கெட். இந்தியாவுக்கு பாகிஸ்தான் கொடுத்த இலக்கு இதுதான்..!

Siva
ஞாயிறு, 21 செப்டம்பர் 2025 (22:01 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்  பர்ஹான் 58 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடினார். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.
 
இந்தியாவின் பந்துவீச்சில், ஷிவம் துபே 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
இன்னும் சற்று நேரத்தில் 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால், இந்திய அணி தனது முழு திறமையையும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

இந்திய அணி வெற்றி பெற்றபோது கவுதம் காம்பீரை ஏன் பாராட்டவில்லை? கவாஸ்கர் கேள்வி..!

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் எப்போது? தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சோஃபி டிவைனுக்கு பெரும் கிராக்கி..!

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments