ஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 போட்டியில் மோதும் 4 அணிகள் எவை எவை? இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்?

Siva
வெள்ளி, 19 செப்டம்பர் 2025 (07:38 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதன்மூலம், சூப்பர் 4 போட்டிகளில் மோதவிருக்கும் நான்கு அணிகளும் உறுதியாகியுள்ளன.
 
சூப்பர் ஃபோர் போட்டிகளின் அட்டவணை:
 
செப்டம்பர் 25: பாகிஸ்தான் அணி வங்கதேச அணியுடன் மோத உள்ளது.
 
செப்டம்பர் 26: இந்திய அணி இலங்கை அணியுடன் பலப்பரீட்சை செய்ய உள்ளது.
 
இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டிக்குத் தகுதி பெறும். எனவே, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டியில் மோதும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்த இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

RCB அணியை வாங்குகிறதா காந்தாரா தயாரிப்பு நிறுவனம்?

124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த இந்தியா.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

2வது இன்னிங்ஸிலும் 153 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு டார்கெட் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments