Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்பந்து போட்டியின் இடையே ரசிகர்களுக்குள் மோதல்: 20 பேர் படுகாயம்!

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2022 (16:36 IST)
கால்பந்து போட்டியின் இடையே ரசிகர்களுக்குள் மோதல்: 20 பேர் படுகாயம்!
கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ரசிகர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக 20 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
மெக்சிகோ நகரில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டதாகவும் இதனால் கால்பந்து போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த மோதல் சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இவர்களில் ஒரு சிலர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வெற்றியை மழை தடுத்துவிடுமா? கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments