பாரீஸ்: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் செயிண்ட் டெனிஸ் நகரில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் பிரான்ஸ், ஐஸ்லாந்து அணி மோதியது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இறுதியில் ஐஸ்லாந்து அணி 2 கோல் அடித்தது. அதை தொடர்ந்து பிரான்ஸ் அணியும் ஒரு கோல் அடித்து முடிவில் 5-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இதையடுத்து வரும் ஜூலை 8-ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி ஜெர்மனி அணியிடம் மோதுகின்றது.