கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது.
அதில் இரட்டையர் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்- போலந்தின் மார்சின் மாட்கவ்ஸ்கி இணை 3-6, 2-6 என்ற நேர் செட்டில் கோண்டினென் (பின்லாந்து) 0 ஜான் பீயர்ஸ் (ஆஸ்திரேலியா) ஜோடியிடம் தோல்வியடைந்தது.
பெண்கள் இரட்டையர் 2-வது சுற்றில் நம்பர் ஒன் கூட்டணியான இந்தியாவின் சானியா மிர்சா-சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ஹோசுமி-மியூ கட்டா ஜோடியை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறியது.