Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு: முதல் பந்திலேயே பவுண்ட்ரி அடித்த ரோஹித்!

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (13:34 IST)
டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு: முதல் பந்திலேயே பவுண்ட்ரி அடித்த ரோஹித்!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
 
இந்த போட்டியின் டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கிய நிலையில் முதல் பந்திலேயே ரோஹித் சர்மா பவுண்டரி அடித்து அசத்தினார்.
 
 இன்றைய போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதும் என்பதால் இந்த இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளில் விளையாடும் வீரர்களின் முழு விவரங்கள் இதோ:
 
இந்தியா; கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், அஸ்வின், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப்சிங்
 
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லியம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், கிறிஸ் வோக்ஸ், அதில் ரஷித்,
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments