இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற டி 20 போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி, ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறி வந்தார். ஆனால் ஆசியக்கோப்பை தொடருக்குப் பின்னர் அவரின் பழைய ஆட்டம் மீண்டும் தொடங்கியது. தற்போது டி 20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் முதல் இடம் பிடித்து மீண்டும் தன்னை ஒரு ரன் மெஷின் என நிருபித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய அணி இன்று அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. கோலி, நல்ல பார்மில் இருப்பது இந்தியாவுக்கு பலமாக அமைந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்திய அணி கடைசியாக 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் அரையிறுதியில் விளையாடிய போது இரண்டு போட்டிகளிலும் கோலி, சிறப்பாக ரன்களைக் குவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 44 பந்துகளில் 72 ரன்கள் குவித்து வெற்றி பெற செய்தார்.
அதே போல 2016 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக 47 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அசத்தினார். ஆனால் இந்த போட்டியில் இரண்டாவதாக பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.