Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் டி 20 – வெஸ்ட் இண்டீஸை பந்தாடியது இங்கிலாந்து

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (11:49 IST)
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி 20 விளையாடி வருகிறது. நடந்து முடிந்துள்ள டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. அதையடுத்து நடந்த ஒருநாள் தொடர் 2-2- என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது.

இதையடுத்து நேற்று இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டித் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை எடுத்தது. அந்த அணியின் நிக்கோலஸ் பூரன் அதிகபட்சமாக 58 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. இங்கிலாந்து தரப்பில் சாம் கரன் அதிகபட்சமாக 4 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார்.


அதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடுக் களமிறங்கிய இங்கிலாந்து அணி 18.5 ஓவர்களில் 161 ரன்களை சேர்த்து வெற்றிப் பெற்றது. அந்த அணியின் பேர்ஸ்டோவின் 68 ரன்கள் மற்றும் ஜோ டென்லியின் 30 ரன்கள் இங்கிலாந்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவின. இதன் மூலம் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments