Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

Advertiesment
ஐபிஎல்
, வெள்ளி, 9 மே 2025 (14:48 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் பதற்ற சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளிலும் இயல்பு வாழ்க்கைப் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் போருக்கு எதிராகவும் ஆதரவாகவும் குரல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “இக்கட்டான நேரத்தில் நாட்டைப் பாதுகாத்து அரணாக நிற்கும் இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம். இந்த ஹீரோக்களுக்கு நாம் கடமைப் பட்டுள்ளோம். இராணுவ வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களின் தியாகங்களுக்கு நன்றி. ஜெய் ஹிந்த்” எனப் பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!