Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான்ன் செல்ல இங்கிலாந்தும் தயக்கம்… இரண்டு நாள் அவகாசம்!

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (11:19 IST)
அடுத்த மாதம் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது.

பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானில் சென்று கிரிக்கெட் விளையாட எந்த வொரு அணியும் முன்வருவதில்லை. 10 ஆண்டு காலமாக துபாயில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகள் நடந்து வருகின்றன. இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சென்ற போது அவர்களின் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதே இதற்குக் காரணம்.

இந்நிலையில் இப்போது நிலைமை மெல்ல மெல்ல மாறி சில நாடுகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அப்படி நியுசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி 20 போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் சென்றது. ஆனால் தொடர் தொடங்க இருந்த கடைசி நேரத்தில் நியுசிலாந்து கிரிக்கெட் வாரியம் வீரர்களின் பாதுகாப்பு காரணமாக தொடரை ரத்து செய்துவிட்டது.

இந்நிலையில் அடுத்த மாதம் அங்கு செல்ல இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் தயக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. பாக் தொடர் குறித்து ஆலோசித்து 48 மணிநேரத்துக்குள் தங்கள் முடிவை வெளிப்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments